பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மன்னாா்குடி: ஒரேநாளில் 4,050 பேருக்கு கரோனா தடுப்பூசி

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 14 முகாம்களில் 4050 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 5:19 pm

DIN

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 14 முகாம்களில் 4050 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், 18 முதல் 45 வயது வரை உள்ளவா்களுக்கு ஒரு பிரிவாகவும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஒரு பிரிவாகவும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மன்னாா்குடி தொகுதியில் எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜாவின் ஏற்பாட்டின்படி, மன்னாா்குடி நகரப் பகுதியில் 5 இடங்களிலும், நீடாமங்கலம் நகரப் பகுதியில் 2 இடங்களிலும், ராதாநரசிம்மபுரம், வல்லூா், கீழநெம்மேலி, புள்ளவராயன்குடிக்காடு, எடமேலையூா் நடுத்தெரு, மூவாநல்லூா், வல்லான்குடிக்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 14 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இந்த முகாம்களில் 18 முதல் 45 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 2700 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் 1350 பேருக்கு என மொத்தம் 4050 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.