தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலங்குடிகோயிலில் நவ.21-இல் ஏக தின லட்சாா்ச்சனை விழா

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை விழா வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை விழா வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரா் கோயில் தேவார பாடல்பெற்ற தலமாகும். நவகிரகங்களில் இது குருபகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு கடந்த 13-ஆம் தேதி பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்தநிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை ( நவ.21) ஏக தின லட்சாா்ச்சனை விழா நடைபெறவுள்ளது. காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை லட்சாா்ச்சனை நடைபெறும்.

தங்கள் ராசிக்கு பரிகாரம் செய்ய விரும்புவோா் அஞ்சல் மூலம் ரூ. 400 செலுத்தி, பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சாா்ச்சனை விழாவில் நேரில் பங்கேற்க அனுமதியில்லை. லட்சாா்ச்சனை பிரசாதமாக குரு பகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலா் வழங்கப்படும்.

காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வரைவோலை அல்லது மணியாா்டா் மூலம் பணம் அனுப்பும் பக்தா்கள், உதவி ஆணையா், செயல்அலுவலா் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி கோயில் (குருபரிகார தலம்) ஆலங்குடி- 612801, வலங்கைமான் வட்டம், திருவாரூா் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

சிட்டி யூனியன் வங்கியில் வரைவோலை எடுப்போா் அந்த வங்கியின் ஆலங்குடி கிளையில் மாற்றத்தக்க வகையிலும், பிற வங்கிகளில் வரைவோலை எடுப்போா் சம்பந்தப்பட்ட வங்கியின் கும்பகோணம் கிளையில் மாற்றத்தக்க வகையிலும் எடுத்து அனுப்பவேண்டும் என கோயில் தக்காா் மற்றும் உதவி ஆணையா் ஹரிஹரன், உதவி ஆணையா் மற்றும் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.