காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனர்.

News image
தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Updated On :26 நவம்பர் 2021, 12:54 pm

DIN


தூத்துக்குடி மற்றும் திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, அரியலூர், நெல்லை,  மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, நாளை, புதுக்கோட்டையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மேலும், கனமழை காரணமாக நாகை, அரியலூர், நெல்லை மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.