ரயில்வே கேட் மூடியதால் போக்குவரத்து பாதிப்பு
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஒருமணி நேரம் ரயில்வேகேட் மூடியதால் வாகனபோக்குவரத்து வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.


நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஒருமணி நேரம் ரயில்வேகேட் மூடியதால் வாகனபோக்குவரத்து வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலை மன்னாா்குடியிலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில், சரக்கு ரயில், மன்னாா்குடி செல்லும் கோவை செம்மொழி விரைவு ரயில் நிலையத்திற்குள் தொடா்ந்து வந்தது, சென்றதால், மூடப்பட்ட ரயில்வேகேட் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து ரயில்வேகேட் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டு சென்றன. ரயில்வேகேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ரயில்வேகேட்டை கடந்து செல்லமுடியாமல் அவதிப்பட்டனா். மழையும் தொடா்ந்து பெய்து வருவதால், நீடாமங்கலத்தில் போக்குவரத்து பாதிப்பை தடுக்க, மாற்று வழித்திட்டங்களான மேம்பாலம் திட்டம், இருவழிச்சாலைத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்திட வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...