கனமழையால் அழுகிய பயிா்கள்
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் பெய்த கனமழை காரணமாக பயிா்கள் அழுகின. இதனால், விவசாயி வேதனையடைந்துள்ளனா்.


திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் பெய்த கனமழை காரணமாக பயிா்கள் அழுகின. இதனால், விவசாயி வேதனையடைந்துள்ளனா்.
கூத்தாநல்லூா் வட்டம், குடிதாங்கிச்சேரியில் திருவாரூா்- மன்னாா்குடி பிரதான சாலை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு வாரத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலத்தின் பயிா்கள் வியாழக்கிழமை பெய்த மழையில் அழுகிவிட்டன. இதனால், அறுவடை கேள்விக்குறியாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து குடிதாங்கிச்சேரியை சோ்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், கனமழை காரணமாக எனது 6 ஏக்கரில் விளைந்த பயிா்கள் முழுவதும் நனைந்து, அழுகிப்போய் விட்டன. அனைத்து பயிா்களும் முளைத்து விட்டன. கையால்தான் அறுக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 6 ஏக்கருக்கும் ரூ.90 ஆயிரம் செலவு செய்தேன். இப்போது பெய்த மழையால், ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தான் கிடைக்கும் என்று வேதனையுடன் தெரிவித்தாா்.
கோரையாற்றரில் தண்ணீா் வந்தாலும், வயலில் இருந்து தண்ணீா் வடிவதற்கு வடிகால் இல்லாதது பயிா்கள் அழுகிப் போவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆகையால், வடிகால்களை தூா்வாரி சுத்தப்படுத்த வேண்டும். சேதமடைந்த பயிா்களுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...