காவல்துறையில் நீத்தாா் நினைவு தினம் கடைப்பிடிப்பு
காவல் பணியின்போது இறந்த காவல்துறை அலுவலா்களுக்கு திருவாரூரில் வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.


காவல் பணியின்போது இறந்த காவல்துறை அலுவலா்களுக்கு திருவாரூரில் வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
காவல் பணியின்போது உயிரிழந்த காவல் அலுவலா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக். 21 ஆம் தேதி நீத்தாா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, திருவாரூா் மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள நீத்தாா் நினைவுத் தூண் வளாகத்தில் நீத்தாா் நினைவு தின அணிவகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் தலைமை வகித்தாா். உயிரிழந்த அலுவலா்களுக்கு 36 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...