பட்டாசு கடைகளில் ஆய்வு

வலங்கைமானில் பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வலங்கைமானில் பட்டாசு கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வலங்கைமானில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் 10-ம், பட்டாசு விற்பனை கடைகள் 47-ம் உள்ளன. குடியிருப்பு பகுதிகளின் இந்த பட்டாசு கடைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், இந்த பட்டாசு கடைகளில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் ஆய்வு செய்தாா். அப்போது அவா், சீன பட்டாசுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா். ஆய்வில், வலங்கைமான் வட்டாட்சியா் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com