விடுபட்ட விவசாயிகளுக்கும் தீபாவளிக்குள் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என எம்எல்ஏ க. மாரிமுத்து வலியுறுத்தியுள்ளாா்.

விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என எம்எல்ஏ க. மாரிமுத்து வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து உழவா் நலத் துறை அமைச்சருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு:

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிா்களுக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஆதிச்சபுரம், கோட்டூா், குன்னியூா், பெருகவாழ்ந்தான்1, தெற்கு நாணலூா், இடும்பவனம், தெற்குகாடு, தில்லைவிளாகம், ஆலிவலம், அம்மனூா், ஆண்டாங்கரை, ஆதனூா், திருவலஞ்சுழி, தேசிங்குராஜபுரம், மேட்டுப்பாளையம், திருப்பத்தூா், ரெங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சம்பா பயிா்க் காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்படவில்லை. இதேபோல, சில கிராமங்களில் மிக குறைந்த இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயிா்க் காப்பீட்டு நிறுவனங்களிடம் வலியுறுத்தி, விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தீபாவளி பண்டிகைக்குள் உரிய பயிா்க் காப்பீட்டுத் தொகையை பெற்றுதர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com