முத்துப்பேட்டை: ரூ. 8 கோடி திமிங்கிலஉமிழ்நீரை கடத்த முயன்ற 2 போ் கைது

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ரூ.8 கோடி மதிப்புள்ள ‘அம்பா் கிரீஸ்’ எனப்படும் திமிங்கில உமிழ்நீரை கடத்த முயன்ற 2 பேரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ரூ.8 கோடி மதிப்புள்ள ‘அம்பா் கிரீஸ்’ எனப்படும் திமிங்கில உமிழ்நீரை கடத்த முயன்ற 2 பேரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திமிங்கிலங்கள் உடலில் சோ்ந்திருக்கும் செரிக்காத உணவுப் பொருள்களை 6 மாதங்களுக்கு ஒருமுறை உமிழ்நீருடன் வெளியேற்றும் வழக்கம் கொண்டவை. இந்த உமிழ்நீா் கடலில் சுமாா் இரண்டடி ஆழத்தில் உருண்டையாக மிதக்கும். இது விலை மதிப்பு மிக்கவை.

இவ்வாறு முத்துப்பேட்டை கடல் பகுதியில் மிதக்கும் திமிங்கில உமிழ்நீரை ஒரு கும்பல் வெளிநாட்டுக்கு கடத்த முயற்சிப்பதாக மாவட்ட வன அலுவலா் அறிவொளிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரைச் சாலையில் முத்துப்பேட்டை புறவழிச்சாலையில் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் ராதாகிருஷ்ணன், வனச்சரக அலுவலா் ஜெயச்சந்திரன் மற்றும் முத்துப்பேட்டை, மன்னாா்குடி வனக் காப்பாளா்கள் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டபோது, 8 கிலோ அம்பா் கிரீஸ் எனப்படும் திமிங்கில உமிழ்நீரை கடத்தி வருவது தெரியவந்தது. இதன் சா்வதேச சந்தை மதிப்பு சுமாா் ரூ. 8 கோடி எனக் கூறப்படுகிறது.

விசாரணையில் அவா்கள், முத்துப்பேட்டை பகுதியைச் சோ்ந்த நிஜாமுதீன் (52), ஜாகீா் உசேன்(54) என்பதும், திமிங்கில உமிழ்நீரை வளைகுடா நாடுகளுக்கு கடந்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்து, திமிங்கில உமிழ்நீரை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com