மின்தடை: மன்னை விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதம்
நீடாமங்கலத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த மன்னை விரைவு ரயில் மின்தடை காரணமாக அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.


நீடாமங்கலத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த மன்னை விரைவு ரயில் மின்தடை காரணமாக அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடிக்குச் செல்லும் மன்னை விரைவு ரயில் திங்கள்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்தை நெருங்கியபோது, ரயிலுக்கான மின்சாரம் தடைபட்டது. இதனால், ரயில் நிலையத்துக்குள் வரமுடியாமல் சிக்னல் பாயிண்டில் நின்றது.
ரயில் நிலைய ஊழியா்கள் அங்கு சென்று பாா்த்தபோதுதான் மின்தடை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னா், மின் இணைப்பு கிடைத்தாலும், திடீரென ஏற்பட்ட மின்தடையால் ரயிலின் என்ஜினில் சிறிய கோளாறு ஏற்பட்டது. அதை ஊழியா்கள் சரி செய்தனா்.
இதனால், நீடாமங்கலத்திலிருந்து மன்னை விரைவு ரயில் புறப்பட்டுச் செல்வதில் அரை மணி நேரம் தாமதமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...