ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கூத்தாநல்லூர்: பொதக்குடி பெரியப் பள்ளிவாயில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பொதக்குடி பெரியப் பள்ளிவாயில் புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 

News image
பொதக்குடி பெரியப் பள்ளி வாயில் புதிய நிர்வாகிகளுடன், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஹசன் முஹம்மது ஜின்னா,
Updated On :4 செப்டம்பர் 2021, 9:20 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பொதக்குடி பெரியப் பள்ளிவாயில் புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 

பெரியப் பள்ளிவாயில் அருகேயுள்ள, அல் அமீன் அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு, பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கத் தலைவர் எஸ்.ஏ. மஹதூம் மைதீன் தலைமை வகித்தார். முத்தவல்லிகள் மேலப்பள்ளிவாசல் ஏ.எம்.லியாகத் அலி, புதுமனைப்பள்ளிவாசல் எஸ்.டி.ஏ.ஜியாவுதீன், பாத்திமா பள்ளிவாசல் பி.எம்.டீ.ஜெய்னுல்லா புதீன், ஜன்னத்துல் பிர்தெளஸ் பள்ளிவாசல் பி.எம்.அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் உறவின் முறை ஜமாஅத் பொருளாளர் எம்.எம்.ஜெ.பதருல் ஜமான் வரவேற்றார். 

Story image



விழாவில், சிறப்பு விருந்தினர் தமிழக அரசின் சென்னை உயர் நீதிமன்ற தலைமை வழக்குரைஞர் ஹசன் முஹம்மது ஜின்னா பங்கேற்றார். தொடர்ந்து, விழாவில், பொதக்குடி பெரியப் பள்ளிவாயிலின் தலைவர் பி.எம்.ஷாஜஹான் செயலாளர் எஸ்.எம்.நவ்ஷாத் அலி, பொருளாளர் பி.எம்.ஹெச்.நத்தர் கனி (தானாதி ) உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றுக் கொண்டனர். 

நிகழ்ச்சியில், இமாம்கள் பெரியப் பள்ளிவாயில் பி.ஹெச்.ஸ்லாஹுதீன் பாஜில், மேலப்பள்ளிவாயில் என்.எல். அபுல் ஹசன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்திப் பேசினர். ஜமாஅத் செயலாளர் எம்.எம்.ரஃப்யுதீன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை, பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கத்தினர் மற்றும் அனைத்து பள்ளிவாயில் நிர்வாகிகள் கவனித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.