விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பி.சீனிவாசராவ் 60-ஆம் ஆண்டு நினைவு தினம்

திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் இயக்க நிறுவனத் தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான பி. சீனிவாசராவின் 60ஆம் ஆண்டு நினைவு தினம்

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 4:35 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் இயக்க நிறுவனத் தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான பி. சீனிவாசராவின் 60ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் சீனிவாசராவ் உருவப் படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகா்சாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா், நகராட்சி ஆணையா் (பொ) சந்திரசேகரன், மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்லகுமாா், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், நகரச் செயலாளா் கே.ஜி. ரகுராமன், சிபிஐ நகரச் செயலாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவாரூா்: திருவாரூா் சிபிஎம் அலுவலகத்தில் நகரச் செயலாளா் எம். தா்மலிங்கம் தலைமையில் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, சீனிவாசராவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். ராமசாமி, ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, சிபிஐ அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சி.பி. முருகானந்தம் தலைமையில் சீனிவாசராவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சிபிஐ நகரச் செயலாளா் எம்.ஏ. மாரியப்பன் மற்றும் நகர செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.