மன்னார்குடியில் இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்

மன்னார்குடியில் மத்திய அரசைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டம்.
மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டம்.

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மக்களவை, மாநிலங்களவையில் விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னைக் குறித்து விவாதிக்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்காமல் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நாடாளுமன்றக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டம், மின்சார திருத்த சட்டம், மோட்டார் வாகன திருத்த சட்டம், பொதுதுறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை, பெகாஸஸ் விவகாரம், புதுதில்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் ஆகியவை குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்காமல் விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசின் போக்கினை பொதுமக்களிடம் எடுத்து சென்று விளக்கிடும் வகையில் மன்னார்குடி கீழராவீதியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு, சிபிஐ நகரக்குழு உறுப்பினர் துரை.பிச்சைக்கண்ணு சபாநாயகராக செயல்பட்டார்.

சிபிஐ மாவட்டச் செயலர் வை.சிவபுண்ணியம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்தை தொடங்கி வைத்தார். வேளாண்துறை அமைச்சராக ஒன்றிய விவசாய சங்க செயலர் வி.எம்.கலியபெருமாள் நியமிக்கப்பட்டார். இதில், சிபிஐ சார்பில் நகரச் செயலர் எஸ் கலைச்செல்வம், இளைஞர் மன்ற நகரச் செயலர் சிவ.ரஞ்சித்,சிபிஎம் சார்பில் நகரச் செயலர் ஜி.ரகுபதி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்திரா, மதிமுக சார்பில் நகரச் செயலர் சண்.சரவணன், விசிக சார்பில் மாநில நிர்வாகி ஆர்.ரமணி, நகரச்செயலர் அறிவுக்கொடி ஆகியோர் கோரிக்கைகளை விவாதித்தனர்.

முன்னதாக, தேசியக் கொடியினை சிபிஐ நகரக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி ஏற்றிவைத்தார். மத்தியஅரசை கண்டித்தும்.புதிய சட்டத் திருத்தங்களை ரத்து செய்யக் கோரியும் தனியார் மயம் ஆக்கும் போக்கினை கைவிட வலியுறுத்தியும், பெகாஸஸ் விவகாரம் குறித்து வெளிப்படைதன்மையுடன் விவாதிக்க வலியுறுத்தியுறுத்தப்பட்டது. இதே போன்று, மன்னார்குடி அடுத்த ராமபுரத்தில் மக்கள் நாடாளுமன்றம் மக்களவை தலைவராக வி.சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது. தேசியக்கொடியினை கே.சுகுமார் ஏற்றிவைத்தார்.

விவாதத்தினை கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் தொடங்கி வைத்தார். இதில்,இளைஞர் மன்ற ஒன்றிய செயலர் எஸ்.பாப்பையன், ஊராட்சி முன்னாள் தலைவர் வி.பழனிமலை, கிளை நிர்வாகிகள் எஸ்.லோகநாதன், கே.ஜோதி, சாந்திசேகர், ரவிச்சந்திரன், அம்பிகாபதி,உள்ளிட்டோர் கலந்துகொண்டு.மத்தியஅரசின் மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com