
புதுச்சேரி: புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் நிகழாண்டு பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையில், திங்கள் கிழமை பிற்பகல், புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் ஏ.நமச்சிவாயம் மற்றும் கல்வி துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
புதுவை மாநிலத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்தாண்டு முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டு தற்போது கரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






