கூத்தாநல்லூர்: நல்லது செய்யவே வந்துள்ளேன்; முதல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பேச்சு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் முதல் நகர்மன்றக் கூட்டத்தில் மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளேன் என நகர்மன்றத்  தலைவர் மு.பாத்திமா பஷீரா வியாழக்கிழமை தெரிவித்தார். 
கூத்தாநல்லூர்: நல்லது செய்யவே வந்துள்ளேன்; முதல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பேச்சு

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் முதல் நகர்மன்றக் கூட்டத்தில் மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளேன் என நகர்மன்றத்  தலைவர் மு.பாத்திமா பஷீரா வியாழக்கிழமை தெரிவித்தார். 

கூத்தாநல்லூர் நகர்மன்றக் கூட்டம், நகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் மு.பாத்திமா பஷீரா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு.சுதர்ஸன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், உறுப்பினர்கள், தலைவர் பேசியது:

கே. தனலெஷ்மி (சிபிஐ) - கோரையாற்றில் வேகத்தடையும், தார்ச்சாலையும் அமைக்கப்பட வேண்டும். பாதுக்காக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்றார். 

பொ.பக்கிரிச்செல்வம் (திமுக) - ஆதார் - பான் கார்டு இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பது கூடாது. கால அவகாசம் வழங்கப்பட  வேண்டும் என்றார். 

கே.மாரியப்பன் (திமுக) - ஆபத்தான மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும்.

ஏ.சொற்கோ (அதிமுக) - அடிப்பம்புகளை சரி செய்ய வேண்டும். 

எம்.முருகேசன் (அதிமுக) - வரி வாங்கப்படாத வீடுகளில் வரி வசூல் செய்யப்பட வேண்டும். 

எஸ்.முஹம்மது அபுபக்கர் சித்திக் (திமுக) - லெட்சுமாங்குடி பாலத்திற்கு பெரியார் பெயரையும், பாய்க்காரப்  பாலத்திற்கு கலைஞர் பெயரையும் சூட்ட வேண்டும்.

கே.துரைமுருகன் (திமுக) - சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரப்பட வேண்டும்.

கே.தேவேந்திரன் (திமுக) - அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களை கவனித்து சரி செய்ய வேண்டும். 

ஆர்.ப்ரோஜூதீன் (திமுக) - மன்றத்தில் உறுப்பினர்களின் முன்பாக பெயர் பலகையை வைக்கப்பட வேண்டும். 

எஸ்.சண்முகம் (திமுக) - அங்காடிக்கு தனிக் கட்டடம் அமைத்துத்தர வேண்டும். 

தாஹிரா சமீர் (காங்கிரஸ்) - அனைத்துக் குளங்களையும் தூர்வாரி, சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும்.

தாஹிரா தஸ்லீமா (திமுக) - ஞாயிற்றுக்கிழமைகளிலும் குப்பைகளை எடுக்க வர வேண்டும். 

செ.வினோதினி (திமுக) - மரக்கடைப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும்  என பேசினர்.

மேலும், மும்தாஜ் பேகம், கஸ்தூரி, ஜெகபர் நாச்சியா, சாந்தி, ப்ரவீணா, ஜெய்புன்னீஸா உள்ளிட்டோர், சாலை வசதிகள், குடிநீர் இணைப்பு, மின் கம்பம் மற்றும் பாலம் அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து பேசினர். 

துணைத் தலைவர் மு சுதர்ஸன் பேசியது: மருத்துவமனையை தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்றார். 

நிறைவாக, தலைவர் மு.பாத்திமா பஷீரா பேசியது: கூத்தாநல்லூர் நகர மக்களுக்கு நல்லது செய்யவே, நகராட்சித் தலைவராக வந்துள்ளேன். அனைவரும் ஒன்றிணைந்து, நகராட்சியை வளம் பெறச் செய்வோம். கொசு மருந்து நமது நகருக்கு தேவையே இல்லை. கழிவுகளும், குப்பைகளும் தேங்காமல் இருந்தாலே கொசு வராது. கொசு மருந்தை சுவாசிக்கும் போது, சுவாசக் கோளாறுகள் ஏற்படும். கொசு மருந்து அடிக்கச் சொல்லி யாரும் வலியுறுத்த வேண்டாம் என்றார். கூட்டத்தில், ஆணையர் கிருஷ்ணவேணி, பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முன்னதாக, அஜந்தாவின் தீர்மானத்திற்கு, துணைத் தலைவர் சுதர்ஸன், நஜ்முதீன், சொற்கோ, முகம்மது அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோர் மரக்கடை பொதுக்கழிப்பிடத்தை ஏன் தனியாருக்கு விட வேண்டும். அவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பார்கள். கட்டணத்தை முடிவு செய்த பிறகு வழங்கலாம் என்றனர். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com