மகளிா் கல்லூரியில் காசநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்
மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் காசநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.


மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் காசநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் தலைமை வகித்தாா். அரசு மருத்துவா் எஸ். சுகந்த பிரியா பங்கேற்று காசநோய் வரமால் தடுப்பு நடவடிக்கைகள், காசநோய் பரவும் முறை, இதனால் பாதிக்கப்பட்டவா்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை, நோயாளிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்து மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தாா். இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் அ. சுகந்தி வரவேற்றாா். மாணவி ப. கயல்விழி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...