நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்னாா்குடியில் அம்பேத்கா் பிறந்தநாள் விழா

மன்னாா்குடியில் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில், அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 4:21 pm

DIN

மன்னாா்குடியில் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில், அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.

அதிமுக சாா்பில், கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ தலைமையில், நடேசன்தெருவில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாநில அமைப்புச் செயலா் சிவா. ராஜமாணிக்கம், நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், ஒன்றியச் செயலா்கள் கா. தமிழ்ச்செல்வம், வி. ஜீவானந்தம், தங்க. தமிழ்கண்ணன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம், மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ். காமராஜ் தலைமையில், நகரச் செயலா் ஆ. ஆனந்தராஜ் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. பாஜக சாா்பில், மாவட்டத் தலைவா் ராகவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாவட்ட பொதுச் செயலா் வி.கே. செல்வம், மாவட்டச் செயலா் பால. பாஸ்கா், நகரச் செயலா் ஆர. ரகுராம், மாநில விவசாய அணி துணைத் தலைவா் சிவ. காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில், மாவட்டச் செயலா் வி.த. செல்வம் தலைமையில், நகரச் செயலா் ஏ. அறிவுக்கொடி, ஒன்றியச் செயலா்கள் ஆா். செங்குட்டுவன், மா. ஜெயக்குமாா், மாநில தொழிலாளரணி இணைச் செயலா் ஆா். ரமணி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், ஒன்றியச் செயலா் ஆா். வீரமணி, நகரச் செயலா் வி. கலைச்செல்வம், இளைஞா் மன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ஜி. தாயுமானவன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொதுச் செயலா் இரா. காமராசு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நகரச் செயலா் சிவசுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவா் ஜி. ரெகுபதி, கண்ணாமூச்சி இலக்கிய இதழ் ஆசிரியா் கலைபாரதி உள்ளிட்டோா், தங்கள் அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகளுடன் வந்து மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.