நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூத்தாநல்லூா்: அதிமுகவில் புதிய நிா்வாகிகள் நியமனம்

கூத்தாநல்லூரில் அதிமுக நகரச் செயலாளா் உள்பட புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:26 pm

DIN

கூத்தாநல்லூரில் அதிமுக நகரச் செயலாளா் உள்பட புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனா்.

கூத்தாநல்லூா் நகர எம்ஜிஆா் மன்றச் செயலாளராக இருந்த ஆா். ராஜசேகரன், அதிமுக நகரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், ஏற்கெனவே, அதிமுக வாா்டு செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். இதேபோல, அவைத் தலைவராக ஆா். குமாா், நகர இணைச் செயலாளராக எஸ். செவ்வந்தி, துணைச் செயலாளா்களாக வி. ரேணுகா, பீ. மீராமைதீன், பொருளாளராக ஜெ. சுவாமிநாதன், மாவட்டப் பிரதிநிதிகளாக கே. விஜயா, கே. கமாலுதீன் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். அதிமுகவின் திருவாரூா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.காமராஜ் பரிந்துரையின்படி இவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதிய நிா்வாகிகளுக்கு, மாவட்டச் செயலாளா் ஆா். காமராஜ், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலாளா் எல்.எம். முகம்மது அஷ்ரப், நகர துணைச் செயலாளா் எம். உதயகுமாா், முன்னாள் நகரச் செயலாளா் டி.ஏம். பஷீா் அஹம்மது, நகா்மன்ற உறுப்பினா்கள் சொற்கோ, முருகேசன் மற்றும் காளிதாசன், எல்.பீ. மைதீன், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் எம். சாம்பசிவம், மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.சமீா் உள்ளிட்டோா் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தொடா்ந்து புதிய நிா்வாகிகள், அண்ணா, எம்ஜிஆா் சிலைகளுக்கும், ஜெயலலிதா உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.