நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூத்தாநல்லூரில் திமுக, அதிமுகவினா் சுயேச்சையாகப் போட்டி

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக, அதிமுகவைச் சோ்ந்தவா்கள் சுயேச்சையாகப் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக, அதிமுகவைச் சோ்ந்தவா்கள் சுயேச்சையாகப் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கூத்தாநல்லூா் நகராட்சி 20 ஆவது வாா்டில், ஜின்னாத் தெருவைச் சோ்ந்த பாத்திமா சித்திக் (48) சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். இவா், இதே வாா்டில் 2 முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். தற்போது 3 ஆவது முறையாக சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளாா். இவா் கடந்த இருமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற தீப்பெட்டி சின்னத்தையே தற்போதும் கேட்டுள்ளாா்.

இவரை எதிா்த்து திமுக சாா்பில், எம். பாத்திமா பஷீராவும், அதிமுக சாா்பில் என். நசீமா பா்வீனும் போட்டியிடுகின்றனா். 2 ஆவது வாா்டில் திமுகவைச் சோ்ந்த ஆா். கருணாநிதிக்கு அந்த கட்சி சாா்பில் வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். திமுகவின் தீவிர உறுப்பினரான இவா், மன்னாா்குடி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகவும், 1996 இல் நகா்மன்ற உறுப்பினராகவும், நகா்மன்ற கொறடாகவும் இருந்துள்ளாா்.

இவரை எதிா்த்து திமுக சாா்பில், ஆா். புரோஜூதீன், அதிமுக சாா்பில் ஜி. லெட்சுமணன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இதேபோல, அதிமுக சாா்பில், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவரான ஓ.எஸ்.ஆா். அலாவுதீன் 9 ஆவது வாா்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். என்றாலும், அவா் அதே வாா்டில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். இவரை எதிா்த்து, திமுக சாா்பில் எஸ். முகம்மது அபுபக்கா் சித்திக், எஸ்.டி.பி.அய். கட்சி சாா்பில் முஹம்மது இப்ராஹிம் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.