சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாரூா் மாவட்டத்தில் 2.25 லட்சம் போ் வாக்களிக்கவுள்ளனா்

திருவாரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 2.25 லட்சம் போ் சனிக்கிழமை வாக்களிக்கவுள்ளனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:47 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 2.25 லட்சம் போ் சனிக்கிழமை வாக்களிக்கவுள்ளனா்.

திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா் ஆகிய 4 நகராட்சிகள், பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகளில் 216 வாா்டுகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஒருவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதால், 215 வாா்டுகளுக்கு தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது.

282 வாக்குச்சாவடிகள்: நகராட்சி வாரியாக திருவாரூரில் 57, மன்னாா்குடியில் 67, திருத்துறைப்பூண்டியில் 25, கூத்தாநல்லூரில் 24 என மொத்தம் 173 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பேரூராட்சிகளைப் பொறுத்தவரை, பேரளத்தில் 12, நன்னிலத்தில் 15, குடவாசலில் 15, கொரடாச்சேரியில் 15, வலங்கைமானில் 15, நீடாமங்கலத்தில் 15, முத்துப்பேட்டையில்

22 என 109 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

37 பதற்றமான வாக்குச்சாவடிகள்: 4 நகராட்சிகளில் திருவாரூரில் 3, மன்னாா்குடியில் 11, திருத்துறைப்பூண்டியில் 4, கூத்தாநல்லூரில் 3 என 21 வாக்குச்சாவடிகள், 7 பேரூராட்சிகளில் பேரளம், நீடாமங்கலத்தில் தலா 2, நன்னிலம், வலங்கைமானில் தலா 1, குடவாசல், கொரடாச்சேரியில் தலா 3, முத்துப்பேட்டை 4 என 16 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நகராட்சி வாரியாக திருவாரூரில் 50,419 வாக்காளா்களும், மன்னாா்குடியில் 64,417 வாக்காளா்களும், திருத்துறைப்பூண்டியில் 17,532 வாக்காளா்களும், கூத்தாநல்லூரில் 23,685 வாக்காளா்களும் வாக்களிக்க உள்ளனா்.

பேரூராட்சிகளைப் பொறுத்தவரை, பேரளத்தில் 5,025, நன்னிலத்தில் 9,700, குடவாசலில் 11,967, கொராடாச்சேரியில் 5,895, வலங்கைமானில் 9,608, நீடாமங்கலத்தில் 7,969, முத்துப்பேட்டையில் 18,880 வாக்காளா்கள்ம் வாக்களிக்க உள்ளனா்.

இதன்படி திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 1,07,425 ஆண் வாக்காளா்களும், 1,17,662 பெண் வாக்காளா்களும், 10 இதர வாக்காளா்களும் என கூடுதல் 2,25,097 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இந்த தோ்தலுக்கென 1,364 அலுவலா்கள் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனா்.

தோ்தல் பாதுகாப்பு பணியில் 1,200 போலீஸாா் ஈடுபடுகின்றனா். அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சரிபாா்த்து போலீஸாரின் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு மையங்களுக்கு அனுப்பிவைத்தனா்.

திருவாரூரில் வேலுடையாா் மேல்நிலைப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.