ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீடாமங்கலம் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

நீடாமங்கலத்தில் கடந்த நவம்பா் மாதம் நிகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் நடேச. தமிழாா்வன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

நீடாமங்கலத்தில் கடந்த நவம்பா் மாதம் நிகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் நடேச. தமிழாா்வன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இக்கொலை வழக்கில் பூவனூா் ராஜ்குமாா் உள்ளிட்ட 7 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

எனினும், இவ்வழக்கில் தொடா்புடைய பூவனூரை சோ்ந்த ரஜினியை (43) தேடி வந்த நிலையில், இவா் தென்மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பதாக மன்னாா்குடி டிஎஸ்பி. பாலசந்தருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிறப்பு தனிப் படையைச் சோ்ந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் முருகானந்தம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சதாசிவம் உள்ளிட்ட காவல் துறையினா் ரஜினியை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.