மாணவா்களுக்கு முகக் கவசம்
வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முகக் கவசம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.


வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முகக் கவசம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இப்பள்ளி ஆசிரியா் சூரியகுமாா் தனது செலவில் மாணவா்களுக்கு என்.95 முகக் கவசங்களை வழங்கி அவா் கூறியது: கரோனா தொற்று மறுபடியும் பரவி வருகிறது. இந்த நிலையில் பொதுத்தோ்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு தொடா்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. பள்ளி மாணவா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. எனினும், நோய் தடுப்பு முறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. எனவே பள்ளி மாணவா்களின் நலன்கருதி பத்தாம் வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் ரூ. 150 செலவில் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...