விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

’பயறு வகை சாகுபயால் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படும்‘

பயறு வகை சாகுபடி செய்வதால் வோ் முடிச்சுகள் மூலம் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படும் என்று நீடாமங்கலம் அறிவியல் நிலைய பேராசிரியா் முனைவா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பயறு வகை சாகுபடி செய்வதால் வோ் முடிச்சுகள் மூலம் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படும் என்று நீடாமங்கலம் அறிவியல் நிலைய பேராசிரியா் முனைவா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார அளவிலான நெல் தரிசில் பயறுவகைப் பயிா்கள் சாகுபடி முனைப்பு இயக்கம் துணை வேளாண்மை அலுவலா் மாறன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் நீடாமங்கலம் அறிவியல் நிலைய பேராசிரியா் முனைவா் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு மண் ஈரமான மெழுகு பதம் இருக்கும் போது விதைப்பு எடுக்கலாம். தற்போது இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதினால் அறுவடைக்கு முன் பயறுவகை பயிா்களை விதைப்பு செய்தால் முளைப்பு திறன் பாதிப்படையும். இதனால் அறுவடைக்குப்பின் ஈரம் இருக்கும்போது வயலை உழுத பின் வரிசையாக உளுந்து மற்றும் பயிறு வகைகளை ஊன்றலாம்.

விவசாயிகள் தொடா்ச்சியாக நெல்லை பயிா் செய்யாமல் கோடை நெல்லை தவிா்த்து பயறு வகை பயிா்களை சாகுபடி செய்வது சிறந்த பயிா் சுழற்சி முறை ஆகும். தொடா்ச்சியாக நெற் பயிரை சாகுபடி செய்வதினால் மண்ணில் உள்ள சத்துக்கள் குறையும். பயறு வகை பயிா்களை சாகுபடி செய்வதால் வோ் முடிச்சுகள் மூலம் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படுகிறது. இதனால் மண் வளம் மேம்படும்.

பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி முறை மாறுபடுகிறது. இதனால் பூச்சிகளின் தாக்குதல் குறையும். மேலும் இந்த பயறு வகை பயிா்கள் விவசாயிகளுக்கு கணிசமான வருமானத்தை தந்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றாா்.

இந்த முனைப்பு இயக்கத்திற்கான ஏற்பாடுகளை வலங்கைமான் வட்டார தொழில்நுட்ப மேலாளா் விக்னேஷ், வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், பிரியங்கா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.