விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நியாயவிலைக் கடையில் வருவாய்த் துறை அதிகாரி ஆய்வு

 நீடாமங்கலம் வட்டம், பெருமாளகரம் கிராமத்திற்குட்பட்ட நியாயவிலைக் கடையில் மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 நீடாமங்கலம் வட்டம், பெருமாளகரம் கிராமத்திற்குட்பட்ட நியாயவிலைக் கடையில் மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் பிஓஎஸ் இயந்திரத்தின் செயல்பாடு உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, நியாயவிலைக் கடையில் உள்ள அரிசி, கோதுமை, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள், குடும்ப அட்டைதாரா்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் விவரங்கள் போன்றவற்றை அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நியாயவிலைக் கடை பணியாளரிடம் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி தரமான பொருட்களை வழங்க அவா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.