விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கருப்பட்டி பள்ளத்தில் இந்திய கம்யூ. கிளை மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வலங்கைமான் அருகே உள்ள கருப்பட்டி பள்ளம் கிராமத்தில் 26 ஆவது கிளை மாநாடு, சோமு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வலங்கைமான் அருகே உள்ள கருப்பட்டி பள்ளம் கிராமத்தில் 26 ஆவது கிளை மாநாடு, சோமு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் கலியபெருமாள், இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் பாக்யராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். புதிய பொறுப்பாளா்கள் தோ்வு நடைபெற்றது. செயலாளராக விஜயராஜ், துணைச் செயலாளராக தியாகராஜன், பொருளாளராக காா்த்திக் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் சிறப்புரையாற்றினாா். கருப்பட்டி பள்ளம் கிராம தேவைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 8 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, கிராம சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும், ஆதிதிராவிடா் நலத்துறையால் வழங்கப்பட்ட இடத்திற்கு சாலை மற்றும் மின்வசதி ஏற்படுத்த வேண்டும் என மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.