கூத்தாநல்லூரில் வேட்புமனு படிவங்கள் வழங்கும் பணி தீவிரம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு படிவங்கள் வழங்கும் பணி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
கூத்தாநல்லூர் நகராட்சி
கூத்தாநல்லூர் நகராட்சி

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு படிவங்கள் வழங்கும் பணி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களை நடத்த வேண்டும் தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி  கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் தேர்தலுக்கான வேட்பு மனு படிவங்களை, திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூ., அமமுக, எஸ்.டி.பி.அய். உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் ஒரு ரூபாய் பணம் கட்டி, படிவத்தைப் பெற்றுச் செல்கின்றனர்.

கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகளிலும், 24 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. நகராட்சியில், 11,239 ஆண் வாக்காளர்களும், 12,442 பெண் வாக்காள்களும்,
4 இதர வாக்காளர்கள் என மொத்தம் 23,685 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், அதிக அளவிலான வாக்காளர்கள் 16 ஆவது வார்டில் 1092 வாக்காளர்களும், குறைந்த அளவில் 22 ஆவது வார்டில் 845 வாக்காளர்களும் உள்ளனர். மேலும், ஆண் வாக்காளர்களில் 1 ஆவது வார்டில் 374 பேரும், பெண் வாக்காளர்களில் 400 பேரும் அதிக வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களாக 11 ஆவது வார்டில் ஆண் வாக்காளர்கள் 555 பேரும், பெண் வாக்காளர்கள் 613 பேரும் உள்ளனர். 1 முதல் 6 ஆவது வார்டு வரை, இளநிலை பொறியாளர் அறையில்  வருவாய் கோட்ட அலுவலக தலைமை உதவியாளர் ஆர்.மீனா மகேஸ்வரியும், 7 முதல் 12 வரை நகரமைப்பு பிரிவு அறையில் வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.ராஜேஷ், 13 முதல் 18 வரை சுகாதார ஆய்வாளர் அறையில் கூட்டுறவு சார்பதிவாளர்  எம்.குமாரசாமி, 19 முதல் 24 ஆவது வார்டு வரை பொதுப் பிரிவு அறையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் கு.மணிகண்டன் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை, நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ப.கிருஷ்ணவேணி, பொறியாளர் ராஜகோபால், மேலாளர் லதா மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் கவனித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com