மன்னார்குடி: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்

மன்னார்குடியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மன்னார்குடியில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக் கோரி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையினர்.
மன்னார்குடியில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக் கோரி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையினர்.
Updated on
1 min read

திருவாரூர்: மன்னார்குடியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணி பாளையம் திரையரங்கம் அருகே எதிரெதிரே இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், மதுப்பிரியர்களால் பிரச்னைகள் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.

மேலும், உடனடியாக பிரச்னைக்குரிய இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பு அமைப்பான கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் மன்னார்குடி மேலராஜ வீதி தந்தை பெரியார் சிலை அருகில் ஊழல் ஒழிப்பு பாசறையின் தஞ்சை நாடளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராதா. தமிழ்ச்செல்வன்  தலைமையில் தொடர் முழுக்கம் செய்து உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

அமைப்பின் நகரச் செயலர் பழனி, நகரத் துணைச் செயலர் குமரேசன், தெற்கு ஒன்றியச் செயலர் புலேந்திரன், இணைச் செயலாளர் பரவை செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தஞ்சை நாடளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கந்தசாமி உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநிலத் தலைவர் ராம.அரவிந்தன் கலந்து கொண்டார் .

மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தினை பாசறையின் மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் ரா.கபிலன், முகமது இஸ்மாயில் ஆகியோர் பழரசம் வழங்கி முடித்து வைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com