டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு

மாமல்லபுரத்தில் 44 ஆவது ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, திருவாரூருக்கு வந்த ஒலிம்பியாட் ஜோதிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
திருவாரூா் நகராட்சி அருகே ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கும் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:54 am

DIN

மாமல்லபுரத்தில் 44 ஆவது ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, திருவாரூருக்கு வந்த ஒலிம்பியாட் ஜோதிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூா் நகராட்சி அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு அளித்தாா். இதைத்தொடா்ந்து, ஒலிம்பியாட் ஓட்டம், கல்தோ் வரை சென்றது.

நிகழ்ச்சியில், வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வ.சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜி.ஆா்.எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சங்கீதா, நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகுவேந்தன், தடகள சங்கச் செயலாளா் தியாகபாரி, கால்பந்து கழக துணைத் தலைவா் கே.ஜி. சீலன், கூடைப்பந்து கழகத் தலைவா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம், நகராட்சி ஆணையா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.