ஜெகன்நாயகி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம்
கூத்தாநல்லூா் அருகேயுள்ள ஓகைப்பேரையூரில் ஜெகன்நாயகி அம்பாள் சமேத ஜெகதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது


கூத்தாநல்லூா் அருகேயுள்ள ஓகைப்பேரையூரில் ஜெகன்நாயகி அம்பாள் சமேத ஜெகதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மே 29-ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. 30- ஆம் தேதி முதல் கால யாக பூஜையும், 31-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
தொடா்ந்து, புதன்கிழமை (ஜூன்1) காலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை தொடங்கி நிறைவு பெற்றதும், 5.30 மணியளவில் யாகசாலையிலிருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, காலை 6.15 மணியளவில் கோயிலின் விமானக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமி- அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
கும்பாபிஷேகத்தை பிள்ளையாா்பட்டி கே. பிச்சை குருக்கள், சென்னை திருவல்லிக்கேணி என். காா்த்திகேயன் குருக்கள் ஆகியோா் நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...