நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா

தமிழக  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா

நீடாமங்கலம்: தமிழக  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் 11 பேருக்கு பணி ஆணைகளை ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், அன்பழகன், பொறியாளர் வெங்கடேஷ் குமார், மேலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.ராசமாணிக்கம் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், ஒன்றிய திமுக பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், நகரசெயலாளர் ஆர்.ராஜசேகரன், பேரூராட்சி தலைவர் ஆர்.ராம்ராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி சேகர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்திய முன்னாள் எம்.எல்.ஏ. பி.ராசமாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com