நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

திருவாரூா் மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்து, தமிழக முதல்வரிடம் சான்றிதழ் பெற்ற மாணவிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 5:25 pm

DIN

திருவாரூா் மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்து, தமிழக முதல்வரிடம் சான்றிதழ் பெற்ற மாணவிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் அந்தந்த மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. இதில், திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் திருவிக அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இளங்கலை 3-ஆம் ஆண்டு மாணவி ஜெ. விக்னேஷ்வரி முதலிடம் பிடித்தாா்.

இம்மாணவிக்கு, சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சான்றிதழ், ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, திருவிக கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவி ஜெ. விக்னேஷ்வரிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கல்லூரி முதல்வா் கோ. கீதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்த்துறை தலைவா் செ. அஜிதா உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.