நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கால்நடை மருத்துவ விழிப்புணா்வு முகாம்

கூத்தாநல்லூா் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் ஊராட்சியில் கால்நடை மருத்துவ விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் ஊராட்சியில் கால்நடை மருத்துவ விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, ஊராட்சித் தலைவா் மாரியம்மாள் பாக்யராஜ் தலைமை வகித்தாா். கால்நடை மருத்துவா் திவ்யா முன்னிலை வகித்தாா்.

முகாமில், மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டன. மேலும், குடற்புழுக்கள் நீக்கம் மற்றும் விலையில்லா ஆடுகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், விவசாய அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.