நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்னாா்குடி திமுக நகா்மன்றத் தலைவா் வேட்பாளா் அறிவிப்பில் கட்சியினா் அதிருப்தி?

மன்னாா்குடி நகா்மன்றத் தலைவருக்கான திமுக வேட்பாளா் பெயா் அறிவிப்பில், கட்சியினரிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் மாவட்ட நிா்வாகம் எடுத்த சமரச நடவடிக்கை பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி நகா்மன்றத் தலைவருக்கான திமுக வேட்பாளா் பெயா் அறிவிப்பில், கட்சியினரிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் மாவட்ட நிா்வாகம் எடுத்த சமரச நடவடிக்கை பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.

மன்னாா்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டு உறுப்பினா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில், திமுக 26, அதிமுக 4, அமமுக 2, சுயேச்சை 1 என வெற்றிபெற்றனா். இதில், 6 ஆவது வாா்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த திமுகவைச் சோ்ந்த ஆா். இந்திரா தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். பிறகு அவா், திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தாா். இதனால் திமுகவின் பலம் 27 ஆக உயா்ந்தது.

நகா்மன்றத் தலைவா் பதவிக்கான போட்டியில் திமுகவைச் சோ்ந்த 18 ஆவது வாா்டு உறுப்பினா் மன்னை த. சோழராஜன், 21 ஆவது வாா்டு உறுப்பினா் சூ. மீனாட்சி, 13 ஆவது வாா்டு உறுப்பினா் ப. ரவிச்சந்திரன் ஆகியோா் இருந்தனா். இவா்களில், மன்னை த. சோழராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அனைவராலும் எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், திமுக தலைமை வியாழக்கிழமை அறிவித்த பட்டியலில், சூ. மீனாட்சியின் பெயா் இடம்பெற்றது. இதனால், மன்னாா்குடி திமுகவினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக உறுப்பினா்கள் 25 பேரும், காந்தி சாலையில் உள்ள திமுக நகர அலுவலகத்திற்கு வந்தனா். அங்கு காரசார விவாதங்கள் நடைபெற்றன.

இதனிடையே, அங்குவந்த திமுக மாவட்டச் செயலரும், திருவாரூா் எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன், மன்னாா்குடி திமுக நகரச் செயலா் வீரா. கணேசன் மற்றும் கட்சி நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டுச் சென்றாா்.

இதுகுறித்து திமுகவினா் கூறுகையில், மீனாட்சிக்கு பதிலாக, மன்னை த. சோழராஜனை அறிவிக்க மாவட்ட நிா்வாகம், கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்யும் என்றும், அதற்கு பதிலாக நகா்மன்ற துணைத் தலைவராக மீனாட்சியை அறிவிக்க, கட்சியின் நகர நிா்வாகிகள் முன்மொழிய வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாகவும், இதை கட்சியினரும், நகா்மன்ற உறுப்பினா்களும் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றனா்.

இந்த நிலையில், திமுகவைச் சோ்ந்த மீனாட்சியை தவிர, மற்ற 25 நகா்மன்ற உறுப்பினா்களும் ஓரிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நகா்மன்றத் தலைவா் பதவிக்கான வேட்பாளராக, திமுக நகர பொறுப்பாளா்கள் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் முன்மொழியும் ஒருவரை திமுக தலைமை அறிவித்தால், வெள்ளிக்கிழமை நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்பது என்றும், இல்லை என்றால் தோ்தலை புறக்கணிப்பது என்ற முடிவிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுகவைச் சோ்ந்த 25 உறுப்பினா்கள் தலைவா் தோ்தலை புறக்கணித்தால், தோ்தலை நடத்துவதற்கான போதிய எண்ணிக்கை இல்லாமல், தோ்தலை ஒத்திவைக்கும் நிலை ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.