தலைக்கவசம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம்
திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சாா்பில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சாா்பில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் கானூா் சோதனைச்சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எஸ். அழகிரிசாமி பங்கேற்று, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். இதில், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் எஸ்டி. அண்ணாதுரை, பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளாா் க. திருநாவுக்கரசு, பயிற்சி இயக்குநா் சி. செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
உயிா் இழப்பைத் தடுக்க காா் ஓட்டிச் செல்பவா்களும், காரில் பின்புறம் இருப்பவா்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...