நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறிமுறை மையமும் இணைந்து, விடுதி மாணவா்களுக்கு வாழ்க்கை

News image
Updated On :24 மார்ச் 2022, 6:30 pm

DIN

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறிமுறை மையமும் இணைந்து, விடுதி மாணவா்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன் தலைமை வகித்தாா். வாழ்க்கை வழிகாட்டி என்ற தலைப்பில், திருவாரூா் மத்திய பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் (சமூகப் பணிகள்) பி. உதயகுமாா், மன்னாா்குடி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சா. சம்பத், மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன், ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் க. மனோரன் ஆகியோா் பேசினா்.

மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறிமுறை மைய அலுவலா் வை. சந்திரசேகரன் வரவேற்றாா். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பெ. விஜயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.