நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுக் கல்லூரியில் தியாகிகள் தினம்

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்து தியாகிகள் தினத்தை புதன்கிழமை கடைப்பிடித்தன.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்து தியாகிகள் தினத்தை புதன்கிழமை கடைப்பிடித்தன.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் சோ. ரவி தலைமைவகித்தாா். விலங்கியல் துறைத் தலைவா் ச. ராமு முன்னிலை வகித்தாா். அறிவொளி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. இயேசுதாஸ், கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் சு. ராஜன் ஆகியோா், நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களை அா்ப்பணித்த தியாகிகள் குறித்து பேசினா்.

பகத்சிங் குறித்த பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு, நேரு யுவகேந்திரா மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன் பரிசு வழங்கினாா். தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில், மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா். கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் ப. பிரபாகரன் வரவேற்றாா். ரா. ஜென்னி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.