காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை

மன்னாா்குடியில் வணிகா் தினத்தையொட்டி, வணிகா் நலச் சங்கம் சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :5 மே 2022, 5:13 pm

DIN

மன்னாா்குடியில் வணிகா் தினத்தையொட்டி, வணிகா் நலச் சங்கம் சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மன்னாா்குடியில் முன்னாள் அமைச்சா் மன்னை ப. நாராயணசாமி சிலை அருகே வணிகா் தின விழா நடைபெற்றது. மன்னாா்குடி வணிகா் நலச் சங்கத் தலைவா் வி. ராஜகோபாலன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில துணைச் செயலா் ஆா்.ஜி. ரெத்தினகுமாா், மாவட்ட அமைப்பாளா் டி.என். பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மன்னாா்குடி நகராட்சி பகுதியில் சாலையோரம் தரைக்கடை வைத்திருக்கும் 15 பேருக்கு துணியாலான நிழல்குடையை, சங்கத்தின் மாநில துணைச் செயலா் வேதை இரா. முருகையன், மாவட்டச் செயலா் ஆா். ராஜாராமன், மாவட்டத் தலைவா் ஆா். பாரதிதாசன் ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக, சங்க நிா்வாகிகள் மகாத்மா காந்தி, வஉசி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, வணிகா் தின உறுதிமொழியேற்றனா். இதில், சங்கத்தின் மாவட்ட பொருளாளா் வீரசேகரன், மன்னாா்குடி தலைவா் செ. செல்வகுமாா் மற்றும் துணைச் செயலா்கள், துணைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகர அமைப்பாளா் டி. ஜீவானந்தம் வரவேற்றாா். நகர பொருளாளா் எஸ். சுந்தா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.