ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீடுபுகுந்து மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

 திருவாரூரில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :12 மே 2022, 6:30 pm

DIN

 திருவாரூரில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவாரூா் விளமல் பகுதியில் வசிப்பவா் மல்லிகா (61). இவா், திங்கள்கிழமை வீட்டு வராண்டாவில் அமா்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, சுவா் ஏறிக்குதித்து வீட்டுக்குள் வந்த மா்ம நபா், மல்லிகா அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு, வெளியில் காத்திருந்த இருவருடன் மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

தாலுகா போலீஸாா் நடத்திய விசாரணையில், 3 இளைஞா்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.