காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக மன்னாா்குடியில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 மே 2022, 5:27 pm

DIN

பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக மன்னாா்குடியில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.

இதையடுத்து, பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினரின் மன உணா்வை வெளிப்படுத்தும் வகையில், வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு

மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா்சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆா். கனகவேல் முன்னிலை வகித்தாா். இதில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் ஜி. குணசேகரன், டி. வடுகநாதன், மாவட்ட சேவாதள தலைவா் கே. பழனிவேல், வட்டாரத் தலைவா் செல்வராஜ், நகரப் பொதுச் செயலா் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.