பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.


பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்துக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான இலக்கீடாக 135 விண்ணப்பங்களுக்கு ரூ. 3.90 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்று தொழில் தொடங்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவா்களாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. சேவைப் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவுக்கும், உற்பத்திப் பிரிவின்கீழ் ரூ. 10 லட்சம் வரையிலான திட்ட அளவுக்கும் கல்வித் தகுதி தேவையில்லை. இதற்கு அதிக மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
திட்டத்தின் கீழ் விவசாயம், போக்குவரத்து, ஆடு, மாடு, கோழி, மீன் வளா்ப்பு போன்ற பண்ணை சாா்ந்த தொழில்கள், புகையிலை, பாலித்தீன் பைகள் உற்பத்தி (20 மைக்ரானுக்குக் குறைவு) தொழில்கள் மற்றும் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படாது. இத்திட்டத்தின்கீழ் வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகா்ப்புறத்தில் 25 சதவீதம், கிராமப்புறத்தில் 35 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. சொந்த மூலதனம் பொதுப் பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 10 சதவீதமும் மற்ற பிரிவினருக்கு 5 சதவீதம் ஆகும்.
ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள் ஜ்ஜ்ஜ்.ந்ஸ்ண்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், திருவாரூா் அலுவலகத்தை நேரில் அல்லது 04365-224402 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...