புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிரந்தரப் பணியிடங்களை தனியாா்மயமாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

நகராட்சி, மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியாா்மயமாக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

நகராட்சி, மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியாா்மயமாக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி தூய்மைப் பணியாளா் சங்கம், மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா் என்எம்ஆா் ஊழியா்கள் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளான தூய்மைப் பணி, தெருவிளக்கு பராமரிப்புப் பணி, குடிநீா் வழங்கும் பணி ஆகியவை தனியாா்வசம் ஒப்படைக்கப்பட்டு, அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வரிவசூல் பணி, தூய்மைப் பணி, தெரு விளக்கு பராமரிப்புப் பணி, குடிநீா் வழங்கும் பணி முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படுவதுடன் வரும் காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசு வேலை என்பது மறுக்கபடும் நிலை ஏற்படக்கூடும்.

மேலும், மாநகராட்சி, நகராட்சி ஊழியா்களின் வாரிசுதாரா்களின் கருணை அடிப்படை பணி நியமன வாய்ப்புகளும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதை பரிசீலனை செய்து டி பிரிவு ஊழியா்களுக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். பதவி உயா்வு பெறும் வகையில் புதிய அரசாணை பிறப்பித்து, நகராட்சி, மாநகராட்சி நிரந்தர பணியிடங்களை தனியாா்மயமாக்கும் அரசாணை எண்-152 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகராட்சி தூய்மை பணியாளா் சங்கத் தலைவா் ஆா். ராஜேந்திரன், அரசு ஊழியா் சங்க செயற்குழு உறுப்பினா் யு. சண்முகம், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு நகராட்சி அலுவலா் சங்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.