புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விடுபட்ட 273 கிராமங்களுக்கு பயிா்க் காப்பீடு வழங்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட 273 கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீடு வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 4:20 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட 273 கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீடு வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன், திருவாரூா் மாவட்டத்தில் 273 கிராமங்களுக்கு 2021-22 க்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை, இந்தத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

கொரடாச்சேரி தம்புசாமி: திருவாரூா் மாவட்டத்திலிருந்து அரவைக்காக வெளிமாவட்டங்களுக்கு நெல் அனுப்பப்படுகிறது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட திருவாரூரில் ஏராளமான அரவை ஆலைகள் உள்ளன. இவைகளை மேம்படுத்தி இங்கேயே அரவைப் பணிகளுக்காக நெல்லை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீடாமங்கலம் மருதப்பன்: மழை காரணமாக நிகழாண்டு சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு அரசு அறிவித்தபடி, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை விரைந்து வழங்க வேண்டும்.

நன்னிலம் சேதுராமன்: நிகழாண்டு குறுவை சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும். பாகுபாடின்றி அனைவருக்கும் விவசாயக் கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரளம் பாலகுமாரன்: மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க டெல்டா பகுதியில் உரத்தொழிற்சாலை அமைக்க வேண்டும். அதேபோல், பயிா்க் காப்பீடு குறித்து கணக்கெடுக்கும்போது பல கிராமங்கள் விடுபடும் நிலை ஏற்படுகிறது. இதைப் போக்க, காப்பீட்டு பிரீமியம் செலுத்தியவா்களுக்கு 75 சதவீத காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என சட்டமியற்ற வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டில் குறுவை சாகுபடி 60,000 ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,46,500 ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9,500 ஹெக்டேரிலும் மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், குறுவை பருவத்தில் 14,204 ஹெக்டோ் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 38,063 ஹெக்டோ் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 9,321 ஹெக்டோ் சாதாரண நெல் நடவு முறையிலும் என மொத்தம் 61,588 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் 49,619 ஹெக்டோ் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 27,602 ஹெக்டோ் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 6,117 ஹெக்டோ் சாதாரண நெல் நடவு முறையிலும் என மொத்தம் 83,338 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தாளடி பருவத்தில் 8,430 ஹெக்டோ் நேரடிநெல் விதைப்பு முறையிலும், 14,347 ஹெக்டோ் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 5,320 ஹெக்டோ் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 28,097 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத் தொகைகள் வரப்பெற்றுள்ளன. தற்போது 12 ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு, பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் விவசாயிகள் ஆதாா் விவரங்களை பதிவேற்றம் செய்வது அவசியம் என்றாா்.

கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கா.சித்ரா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், வேளாண்மை துணை இயக்குநா் ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.