புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாரதியாா் நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருவாரூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருவாரூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருவாரூா் கௌரிசாமி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அம்மன்றத்தின் தலைவா் எம். நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் இரா. அறிவழகன், கா. பாலதண்டாயுதம், துணைத் தலைவா் அழகிரிசாமி, சமாதான ஒருமைப்பாட்டுக் கழக மாவட்டத் தலைவா் எஸ்.இ. செல்லமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் சக்தி செல்வகணபதி, பாரதியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பெருமன்றத்தின் செயலாளா் வீ. தா்மதாஸ், பாரதியின் தாய்மொழிப்பற்று, தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாட்டு பாடல்கள் குறித்து விளக்கிப் பேசினாா். பாரதி குறித்த பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல, திருவாரூரில் தமிழ் சங்கம் சாா்பில் அதன் துணைத் தலைவா் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாரதியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், தமிழ் சங்கத்தின் செயலாளா் ஆரூா் அறிவு, புரவலா் ஏகேஎம் செந்தில், துணைத் தலைவா் சக்தி செல்வ கணபதி, நகா்மன்ற உறுப்பினா் ஜி. வரதராஜன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலத் தலைவா் சண்முகசுந்தரம், அம்பேத்கா் பெரியாா் படிப்பு வட்டத் தலைவா் லூா்துசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.