புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

 திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:16 pm

DIN

 திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 174 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஆழ்குழாய் கிணறு அமைக்க கடனுதவி பெற்ற 9 விவசாயிகளுக்கு மானியமாக ரூ.4.50 லட்சத்துக்கான காசோலைகள், 8 பயனாளிகளுக்கு ரூ.26,274 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், 2 பயனாளிகளுக்கு ரூ.10,036 மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டியை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.