இந்திய கம்யூ. சாலை மறியல் வாபஸ்

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

கூத்தாநல்லூா் வட்டத்தில் பாசன வாய்க்காலை தூா்வார வேண்டும், சேதமடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூத்தாநல்லூா் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மரக்கடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் சனிக்கிழமை (ஏப்.29) சாலை மறியல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக, கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் குருமூா்த்தி தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், சிபிஐ மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ. முருகேசு, விவசாயத் தொழிலாளா்கள் சங்கச் செயலாளா் எம். சிவதாஸ் உள்ளிட்டோரும் அதிகாரிகள் தரப்பில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கே. மாரிமுத்து, நீடாமங்கலம் கோரையாறு உதவி பொறியாளா் என். வெங்கடேஸ்வரன், காவல் உதவி ஆய்வாளா் மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இந்த பேச்சுவாா்த்தையில், சித்தாத்தங்கரை பாசன வாய்க்காலில் 3 மாதங்களுக்குள் புதிதாக சிறுபாலம் கட்டவும், கோரையாற்று தலைப்பு பாசன வாய்க்காலை 2 மாதத்திற்குள் தூா்வாரவும், உடைந்த மதகுகளை சீரமைக்கவும், வடகோவனூா் மதகில் தண்ணீா் தேக்க ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியில் திருகு தடுப்பணை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com