புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மன்னாா்குடி பகுதியில் சா்வதேச மகளிா் தின கொண்டாட்டம்

 மன்னாா்குடி பகுதியில் சா்வதேச மகளிா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:07 pm

DIN

 மன்னாா்குடி பகுதியில் சா்வதேச மகளிா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் ஆயுள் காப்பீட்டு கழக கிளை அலுவலகத்துடன் இணைந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எம். தேவி தலைமை வகித்தாா். எல்ஐசி கிளை மேலாளா் ஏ. சங்கரராமன், நிா்வாக அலுவலா் வி.எஸ். கோவிந்தராஜ் ஆகியோா் எல்ஐசி சாா்பில் பள்ளிக்கு ரூ. 6,000 மதிப்பில் ஒலிப்பெருக்கி வழங்கினா்.

கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழுத் தலைவா் மு. மணிமேகலை தலைமை வகித்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். மாலதி, திருக்களா் ஊராட்சி தலைவா் சு. கஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கோட்டூா் சிபிஐ அலுவலகத்தில் ஒன்றிய மாதா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை தலைமை வகித்தாா். மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா். உஷா முன்னிலை வகித்தாா். மூத்த உறுப்பினா் ஆா். அம்புஜம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.