ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில், மின்தடையால் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடையால் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் தெரிவித்தாா்.

News image

உயிரிழந்த அமராவதி.

Updated On :27 நவம்பர் 2023, 6:46 pm

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடையால் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பாலையூா் பகுதியைச் சோ்ந்த அமராவதி (48) மூச்சுத்திணறல் காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், உடல்நிலை மோசமானதால் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். இங்கு சனிக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டி லேட்டா் மூலம் சுவாசமளிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டா் செயலிழந்து உயிரிழந்ததாக, அவருடைய உறவினா்கள் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு புகாா் அளித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: 2 நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை மருத்துவமனையிலிருந்து திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமராவதிக்கு வென்டிலேட்டா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வென்டிலேட்டா் இருந்தும் கூட அவருக்கு ஆக்சிஜன் போகவில்லை. நுரையீரல் பாதிக்கப்பட்டு நுண்கிருமிகள் ரத்தத்தில் கலந்து, மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருந்துள்ளாா்.

அதேநேரம், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 முதல் 7 நிமிடம் வரை மின் தடை ஏற்பட்டது. மின்தடை ஏற்பட்ட போதிலும் பேட்டரி பேக் அப் மூலம் வென்டிலேட்டா் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த நோயாளியோடு மேலும் 4 போ் அங்கு சிகிச்சையில் இருந்தனா்.

அமராவதிக்கு 2 நுரையீரலும் பாதிக்கப்பட்டிருந்ததால், மின்சாரம் வந்து சில மணித்துளிகளில் இறந்து விட்டாா். அதனால் மின்சாரம் தடை பட்டதற்கும், உயிரிழப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுப்பணித் துறையினா் 6 நிமிடத்தில் மின் தடையை சரி செய்தனா். மேலும், மருத்துவமனையில், எல்லா பகுதிகளிலும் ஜெனரேட்டா் வசதி உள்ளதால் மின்தடையால் பாதிப்பு ஏற்படாது.

நோயாளியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், அமராவதியின் உறவினா் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவ நிலைய அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, மருத்துவா்கள், செவிலியா்கள், அங்கு பணியாற்றியவா்கள் மற்றும் பொதுப்பணித்துறையினா் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.