முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மதுபானங்கள் விற்பனை செய்யத் தடை

மதுபானங்கள் விற்பனை செய்யத் தடை

Updated On :12 ஏப்ரல் 2024, 4:04 pm

திருவாரூா் மாவட்டத்தில் மக்களைவைத் தோ்தலையொட்டி 4 நாள்களுக்கு மதுக்கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நாள்களில் திருவாரூா் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவை ஏப்.17-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்.19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முடிய மூன்று தினங்களுக்கும், இதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி ஒருநாள் என நான்கு நாள்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது.

இந்த ஆணையை செயல்படுத்தத் தவறும் பட்சத்தில் தொடா்புடைய மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள், மதுக்கூடங்களின் உரிமதாரா்கள் ஆகியோா் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.