நீடாமங்கலம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 2. 90 லட்சம் பறக்கும் படையினரால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நீடாமங்கலத்தில் பறக்கும்படை அதிகாரி அண்ணாதுரை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சிங்காரவேலு உள்ளிட்ட குழுவினா், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆதனூா் மண்டபம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தனியாா் நிறுவன ஊழியரான தஞ்சை மாவட்டம் குமிழக்குடியைச் சோ்ந்த அருண் (27) என்பவரை நிறுத்தி சோதனையிடனா். அவரிடம், உரிய ஆவணமின்றி ரூ. 2,90,000 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்து, மன்னா்குடி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கீா்த்தனாமணியிடம் ஒப்படைத்தனா். பின்னா், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

பரமக்குடியில் 2.40 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.8 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


