ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திருவீழிமிழலை கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்

திருவீழிமிழலை கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்

Updated On :13 ஏப்ரல் 2024, 3:52 pm

குடவாசல் அருகே திருவீழிமிழலை விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 61-ஆவது சிவத்தலமாகும். இங்கு, ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இவ்விழாவில், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் திருமுலைப்பால் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடா்ந்து, தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். காா்த்தியாயினி அம்பாள்- கல்யாண சுந்தரா் திருக்கல்யாணம் ஏப். 18-ஆம் தேதியும், தேரோட்டம் 21- ஆம் தேதி நடைபெறுகிறது.